Home
About Us
Government Association Downloads Contact Us
   

 

 

 

பதவி உயர்வு வழங்கக்கோரி

புதுவை தலைமை செயலகத்தில் அமைச்சக ஊழியர்கள் ஸ்டிரைக்

 

புதுச்சேரி, டிச. 20:

 

புதுவையில் இளநிலை எழுத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கக்கோரி அமைச்சக ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பணிகள் முடங்கின.

 

புதுவை தலைமைச் செயலகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சுமார் 200க்கும் மேற்பட்ட முதுநிலை எழுத்தர் பணியிடங்களும், 400 இளநிலை எழுத்தர் பணியிடங்களும் காலியாக உள்ளது. கடந்த 9ம் தேதி 340 இளநிலை எழுத்தர் பணி இடங்களுக்கான தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் நேற்று வெளியானது. காலியாக உள்ள முதுநிலை எழுத்தர் இடங்கள் இதுவரை நிரப்பப்படவில்லை.

 

இதற்கிடையே, 7 ஆண்டுகளுக்கு மேல் அரசு துறைகளில் பணியாற்றி வரும் இளநிலை எழுத்தர்கள் தங்களுக்கு முதுநிலை எழுத்தர் பதவி உயர்வு வழங்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த பிரச்னையை பரிசீலித்த கவர்னர் மற்றும் முதல்வர் நூற்றுக்கும் 100க்கும் மேற்பட்ட இளநிலை எழுத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவிட்டனர்.

 

எனினும், இதுவரை பதவி உயர்வு வழங்கப்படவில்லை. ஆண்டு முடிவு என்பதால் இந்த மாதத்திலேயே பதவி உயர்வு வழங்கினால் ஊதிய உயர்வுக்கு பயனாக இருக்கும் என கருதி அமைச்சக ஊழியர் கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று காலை தலைமைச்செயலகத்தில் அமைச்சக ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சக ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் ராஜேந்திரன் வேலை நிறுத்தம் குறித்து விளக்கி பேசினார்.

 

செயலாளர்கள் மணி மாறன் முன்னிலை வகித் தார். 24ம் தேதிக்குள் இள நிலை எழுத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்காவிட்டால் தொடர்ந்து காலவரையற்ற போராட்டங்களை நடத்தப்போவ தாக தெரிவித்தனர்.

 

 

 
அமைச்சக ஊழியர்கள் 2ம் நாளாக ஸ்டிரைக்
புதுச்சேரி, டிச. 27:
புதுவை ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியர்கள் சங்கத்தினர், முதல்வர் மற்றும் கவர்னர் ஒப்புதல் அளித்தபடி இளநிலை எழுத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். காலியாக உள்ள 200க்கும் மேற்பட்ட உதவியாளர், கண்காணிப்பாளர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 24ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். கிறிஸ்துமஸ் விடுமுறையை அடுத்து, நேற்று (26ம் தேதி) 2ம் நாளாக வேலைநிறுத்தம் தொடர்ந்தது. தலைமை தபால் நிலையம் எதிரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க பொதுச் செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.தலைவி சுந்தரி, செயலாளர் வேலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் மணிமாறன், வின்சென்ட், ரவி மற்றும் 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் தலைமை செயலகத்தில் பணிபுரிபவர்கள் மட்டுமின்றி பிறதுறை அலுவலகங்களை சேர்ந்த அமைச்சக ஊழியர்களும் கலந்து கொண்டனர். இதனால் தலைமை செயலகம், அனைத்து துறை அலுவலகங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டன.

123 இளநிலை எழுத்தர்களை முதுநிலை எழுத்தர்களாக பதவி உயர்வு அளித்ததையொட்டி, ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியர்கள் சங்கத்தினர், பொதுச்செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்

 

 
 
 
 
 
 

| HOME | GOVERNMENT | ASSOCIATION | DOWNLOADS | CONTACT US |

 

For your valuable Suggestions and queries contact president@pumsa.in

Copyright www.pumsa.in @ PUMSA Technologies, Puducherry